வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த தண்ணீர் - கிராம மக்கள் சாலை மறியல்..
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்ததால், அங்கிருந்து வெளியேறி சாலையில் தங்கும் நிலையில், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் அவதிப்படுவதாக கூறி இருவேல்பட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதை முறையாக அறிவிக்கவில்லை என்றும், முன்னேற்பாடுகள் எதுவும் செய்ய முடியாமல் கால்நடைகளைக் கூட அழைத்து வரமுடியவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
Comments