ஓடை அமைக்க இடம் தராததால் நகருக்குள் புகுந்த வெள்ளம்..
சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் சாலையில் ஓடை கட்டுமான பணி முழுமை பெறாததால் ஏற்காடு மலையில் பெய்து ஓடையில் வந்த மழைநீர் சுமார் 100 வீடுகளை வெள்ளமாக சூழ்ந்தது.
பார்வையிட வந்த மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதியினர் முற்றுகையிட்டு ஓடைப்பணியை ஏன் முடிக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஓடை மேற்கொண்டு செல்ல யாரும் இடம் தரவில்லை எனவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அதிகாரிகள் மழைக்காலம் முடிந்த பின்னரே மேற்கொண்டு ஓடை அமைக்க முடியும் என தெரிவித்தனர்.
தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றி, மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Comments