ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு ..
விக்கிரவாண்டி அருகே வராகநதி ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய தண்டவாளத்தின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் அனைத்தும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில ரயில்கள் திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு திருப்பி விடப்படுகின்றன. சென்னை மார்க்கத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் சில ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Comments