ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பூ.மாம்பாக்கம், மேப்புலியூர் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments