ரயில்வே தூக்குப்பாலத்தை மேலே தூக்கி அதிகாரிகள் சோதனை
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் செங்குத்து தூக்குப் பாலத்தை மேலே தூக்கி ரயில்வே கட்டுமானப் பொறியாளர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
பாலத்தை தூக்க பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளின் உறுதித் தன்மை, தண்டவாள அலைன்மெண்ட், அதிர்வு குறித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டு சென்சார் கருவி மூலம் டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments