டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி
டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த நபரிடம் ஏழு லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்று ஏமாற்றியதாக தருமபுரியைச் சேர்ந்த செல்வக்குமார், திருவாரூரைச் சேர்ந்த கௌதம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடக்கத்தில் ஆன்லைன் வேலைக்கு கமிஷன் கொடுத்து நம்பவைத்து அதிக பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறி மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து செல்போன்கள், வங்கி ஏடிஎம் கார்டுகளை போலீசார் கைது செய்தனர்.
Comments