ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் மழை..
ஃபெஞ்சல் புயல் காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகே ராட்சத மரம் ஒன்றின் கிளைகள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததில் மின் கம்பம் ஒன்றும் சாய்ந்தது.
தகவல் கிடைத்த நெடுஞ்சாலைத் துறையினர், விரைந்து சென்று மரக்கிளை மற்றும் மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பக்கோடா பாயிண்ட் செல்லும் பாதையில் விழுந்த மரக்கிளைகளும் அகற்றப்பட்டன.
Comments