ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம்
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரியபாளையம் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
மங்களம் கிராமத்திற்கு செல்லும் ஆற்றின் குறுக்கே இருந்த மண் பாதையும் நீரில் மூழ்கியதால், காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராம மக்கள், பெரியபாளையம் வழியாக 10கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments