மதுராந்தகத்தில் ஆற்றின் கரை உடைந்து வயல்வெளியில் புகுந்த வெள்ளநீர்...
ஃபெஞ்சல் புயல் கனமழையால் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அருகே பாயும் ஓங்கூர் ஆற்றின் கரை உடைந்து புதுப்பட்டு கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments