மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள்

0 241

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோபுரங்களில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் 9 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலித்தன. அண்ணாமலையார் கோவிலின் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்குகிறது.

டிசம்பர் 13-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments