கட்டட அனுமதிக்கு ரூ.30,000 லஞ்சம் பெற்ற பேரூராட்சி அதிகாரி கைது
நீலகிரி மாவட்டம் குன்னூரையடுத்த அரவங்காடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ராஜ்குமாரிடம் கட்டட அனுமதிக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜன் கைது செய்யப்பட்டார்.
அரசு உத்தரவின் பேரில், கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு, ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்திலும் அனுமதிக்கு விண்ணப்பித்த சுபாஷ் ராஜ்குமாரிடம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
Comments