லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமால் கோவில் சுற்று வட்டார பகுதியில் நிறுத்தப்படும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் டீசல் மற்றும் பேட்டரியில் களவு போவது தொடர் கதையாக இருந்தது.
போலீசாரோ அல்லது லாரி ஓட்டுனர்களோ பார்க்கும் பொழுது திருடர்கள் இருட்டுக்குள் சென்று மறைந்து விடுவதும் வாடிக்கையாக தொடர்ந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றில் மர்ம ஆசாமி ஒருவர் பேட்டரி திருடுவதாக தகவல் கிடைத்ததும், லாரி ஓட்டுநர்கள் அந்த நபரை விரட்டி சென்றனர் .
அந்த நபர் திடீரென இருட்டுக்குள் சென்று மாயமாகிவிட்டார் அவர் எங்கு சென்றார் ? எங்கு மறைந்தார் ? என்று தெரியாமல் லாரி ஓட்டுனர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அனைத்திலும் தீவிர சோதனை நடத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஒரு லாரியை மறித்து அந்த லாரிக்கு அடியில் டார்ச் லைட் அடித்து பார்த்தனர்.
அந்த லாரியின் முன்பக்க இரு டயர்களுக்கு இடையில் உள்ள இரும்பு சேஸ் பகுதியில் பாம்பு போன்ற ஒரு உருவம் பதுங்கி இருந்தது.
போலீசார் நீண்ட கம்பை கொண்டு அந்த உருவத்தின் மீது தட்டி பார்த்தபோது அது ஒரு மனிதர் என்பது தெரிய வந்தது இதை அடுத்து அவரை தட்டி சத்தம் போட்டனர்.
நிக்கல் நிக்கல் என்று இந்தியில் சத்தம் போட்டதும் அந்த நபர் மெதுவாக ஊர்ந்து வெளியே வந்தார் தான் பதுங்கி இருப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தனது சட்டையை கழற்றி மறைத்து வைத்துவிட்டு வெற்று உடம்போடு அந்த இரும்பு சேசில் அவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது
Comments