நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை
நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
நேற்று காலை எட்டு முப்பது மணி முதல் இன்று காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக சுமார் 96 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர், மறைக்கான்சாவடி, திருப்புகலூர், வடுகச்சேரி, கிராமத்துமேடு, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Comments