கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - புதுச்சேரி ஆட்சியர் ஆலோசனை

0 245

புதுச்சேரியில் கனமழை மற்றும் பாதிப்புகளை எதிர் கொள்ள மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவசர நிலையை எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர்  மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அனைத்து நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments