இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!

0 673
இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலகத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தில் கணிணி பழுதானதால், கடந்த ஒரு வாரமாக ஆதார் தொடர்பான எந்த ஒரு பணியையும் செய்ய முடியாமல் உள்ளதாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அவ்வழியாக நத்தம் நோக்கி பேருந்துகளில் சென்றவர்கள், 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றதாக கூறப்படுகிறது.

ஆதார் சேவைகளுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments