ஏரிக்கரையா? குப்பைக் கிடங்கா? ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் நீர் மாசடைவதோடு, விவசாயம், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இறைச்சிக் கழிவுகள், வீட்டுக் குப்பைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதாக அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குப்பை கொட்டுவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறி வைக்கப்பட்டுள்ள வாட்சப் எண்ணும் கண் துடைப்புதான் என்று கூறும் அவர்கள், தவளகிரீஸ்வரர் ஆலயம் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் இந்த பிரதான சாலையில் குப்பைக் கழிவுகளைக் கொட்டுவோர் குறித்து அறிய அங்கு சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments