UPI, ATM, கிரெடிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வாங்குவது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு

0 576

யுபிஐ, ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பயணச் சீட்டு வழங்கும் கருவியை கையாள்வது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க பயிற்சி வழங்க சென்னை மாநகர போக்குவரத்து கழக கழகம் முடிவு செய்துள்ளது.

நடைமுறைக்கு வந்து 8 மாதங்களை கடந்தும் யுபிஐ முறையில் டிக்கெட் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

3 வாரங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாரிமுனை உள்பட 20 முக்கிய பேருந்து நிலையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments