வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு

0 378

காஞ்சிபுரம் உப்பேரிகுளம் பகுதியில் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு காரணமாக 4 வயது பெண்  உயிரிழந்துள்ள நிலையில், மாசு கலந்த குடிநீர் விநியோகித்தது காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சங்கர் என்பவரின் குழந்தை மோனிகா, நேற்று அதே பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு வந்தபிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், செவிலியர்கள் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டும் பயனில்லாமல் குழந்தை இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மாசு கலந்த குடிநீர் காரணமா? அங்கன்வாடி உணவு விஷமானாதா? என்பதை அறியும் வகையில், குடிநீர் மற்றும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments