2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்

0 662

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து மீட்டனர்.

கணவரை இழந்து, வீட்டில் தனியாக வசித்துவந்த வடிவம்மாள், 2 நாட்களாக செல்போனை எடுக்காததால், வெளியூரில் வசித்துவந்த அவரது மகள்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

2 நாட்களுக்கு முன் கால் இடறி விழுந்த மூதாட்டி, நகர முடியாமல் மயங்கி கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments