ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..

0 1079

உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞர்களில் ஒருவரான ரஷ்யாவைச் சேர்ந்த 39 வயது விளாடிமிர் ஷ்க்லியாரோவ் (Vladimir Shklyarov), ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த கடந்த 16ஆம் தேதியன்று அவரது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பு கட்டிடத்தின்அருகில் உள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது கீழே விழுவது பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாலே நடனக் கலைஞர்கள், துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினர்.

விளாடிமிர் ஷ்க்லியாரோவ் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது, சக பாலே நடனக் கலைஞர்கள் கை தட்டி விடை கொடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments