ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..
சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில், நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில், உடலை வளைத்து புகுந்து, ஆபத்தான முறையில் பயணிகள் செல்கின்றனர்.
இதுகுறித்து கேட்டபோது, தண்டவாளத்தை கடக்கும் பகுதியில், கடந்த 2 வாரத்திற்கு மேலாக, விரைவு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி, இவ்வாறு செல்லும் நிலை உள்ளதாக, பயணிகள், பொதுமக்கள் கூறுகின்றனர்.
காரணமே இல்லாமல், நீண்ட நாட்களுக்கு ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பயணிகள் தெரிவித்தனர்
Comments