தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

0 570

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

ஆறுமுகநேரி, காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


இதேபோன்று ஸ்ரீவைகுண்டம், ஏரல் ,நாசரேத், பேய்குளம் ,சாத்தான்குளம் பகுதிகளில் இருள் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

அதே சமயம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் பிள்ளைகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments