மதுபோதையில் பேருந்தை இயக்கிய பேருந்து பணிமனை மெக்கானிக் - காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து

0 768

சென்னை , அடையாறில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை மெக்கானிக் குணசேகரன் என்பவர் மதுபோதையில் பேருந்தை இயக்கி அருகே இருந்த காவல் நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

ஒழுங்கீனம் காரணமாக குணசேகரனுக்கு 10 நாட்களாக பணி வழங்கப்படாததால், இன்று அதிகாலை அடையாறு காவல் நிலைய வாயிலில் காவலர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு அவர் பேருந்தை இயக்கி மோதியதில் சுற்றுச்சுவரும், அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. குணசேகரன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments