மாஞ்சோலையில் குடிநீர், மின்சாரப் பணியாளர்களுக்கு குத்தகை காலம் முடிந்ததால் ஊதியம் நிறுத்தம்

0 324

குத்தகை காலம் முடிந்ததால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் குடிநீர், மின்சாரம் சார்ந்த பணிகளை பராமரித்து வந்த பணியாளர்களுக்கு இனி சம்பளம் வழங்கப்படாது என பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை எடுத்துக் கொள்ள இருந்த ஒரே மருத்துவமனையும் பூட்டப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ்க்கு டிரைவரும் இல்லை என தேயிலை தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மின்சாரம், குடிநீர், மருத்துவ பிரச்சனையை சரி செய்ய மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்திருப்பதாகவும், மின்சாரத்துறை செயற்பொறியாளர் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments