இருசக்கர வாகன ஓட்டியின் மீது அதிவேகமாக மோதிவிட்டு தப்பியோடிய BMW கார் ஓட்டுநர்

0 310

சென்னை போரூர் அருகே, அதிகாலை 2 மணியளவில், தாம்பரம்-மதுரவாயல் பைபாசில், BMW கார், முன்னால் சென்ற டூவிலர் மீது மோதிய விபத்தில், இருசக்கர வாகன ஓட்டி பக்கவாட்டு சாலையில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணையில், டூவிலரில் வந்தவர், தனியார் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் எனத் தெரியவந்தது. இவர் பகுதிநேரமாக ரேபிடோ ஊழியராகவும் இருந்து வந்துள்ளார்.

தாம்பரம் பகுதியில் வாடிக்கையாளரை இறக்கிவிட்டு, அம்பத்தூரில் உள்ள வீட்டிற்கு, பைபாசில் திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பின்னால், அதிவேகத்தில் வந்ததாக கூறப்படும் BMW கார் மோதிய வேகத்தில், பைபாசை ஒட்டியுள்ள பக்கவாட்டு சாலையில் டூவிலரோடு தூக்கிவீசப்பட்டு பிரதீப்குமார் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய அதிவேக BMW சொகுசு காரின் சென்சார் செயலிழந்ததால், கார் சில அடி தூரத்தில் நின்றுவிட்டதால் அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த BMW கார் ஓட்டுநர் முரளியை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments