தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பாலிஹோஸ் நிறுவனத்தில் ஐ.டி. சோதனை

0 686

மருத்துவத்துக்கு தேவையான உயர்தர குழாய்களை தயாரிக்க கடந்த வாரம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பாலிஹோஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்ப -குழாய், டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய் போன்றவற்றை தயாரிக்க பாலிஹோஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்தநிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள Polyhose நிறுவனத்தின் இயக்குநர் சபீர் யூசுப் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று பூந்தமல்லி அருகே அமைந்துள்ள பாலிஹோஸ் ஆலை, கிண்டியில் அமைந்துள்ள அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments