பட்டுக்கோட்டை ரெஙக்நாத பெருமாள் கோயில் நிலத்தில் கொட்டகையை அகற்ற முயன்ற கோவில் அதிகாரிகள் மீது தாக்குதல்

0 590

பட்டுக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அலுவலகத்தை இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் கையக்கப்படுத்தினர்.

அதன் உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தியதால், அலுவலகம் அமைத்திருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் ராஜரத்தினம் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜரத்தினம் அவரது மகன் சரண்குமார் மற்றும் ஆதரவாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கோவில் அதிகாரிகளையும் ஊழியர்களையும் விரட்டி விரட்டி தாக்கியதாக கூறப்படுகின்றது

அடிதாங்காமல் மயங்கி விழுந்த கோவில் கணக்கர் ரெங்கராஜை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments