அலட்சியமாக பெண் சாலையை கடந்ததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு..

0 872

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண் எதிர்திசையை கவனிக்காமல், அலட்சியத்துடன் சாலையை கடக்க முயனறதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோனேரிப்பட்டியை சேர்ந்த தேன்மொழி என்பவர் எந்த சைகையும் செய்யாமல் சாலையை கடந்தபோது எதிர்திசையில் அதிவேகத்தில் வந்த ஆர்1 பைக் நேருக்கு நேர் மோதிய விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரண்டு வண்டிகளில் வந்தவர்களும் தலைக்கவசம் அணியாமல் வந்த நிலையில், ஆர்1 பைக்கில் வந்த குணசேகரன் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு பின்சீட்டில் அமர்ந்து வந்த கூலித்தொழிலாளி செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments