என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்த்துறை சோதனை..
போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 14 இடங்களில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சரித்திரப்பதிவேடு குற்றவாளியாக இருந்த சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவரது கூட்டாளிகள் குறித்த தகவல்களை பெறுவதற்காகவும், கட்டப்பஞ்சாயத்து செய்து வாங்கிய நிலங்களின் ஆவணங்களை கைப்பற்றுவதற்காகவும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை, சிட்லபாக்கத்தில் சீசிங் ராஜாவின் வீடு மற்றும் சேலையூர் மப்பேடூ, கஸ்பாபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிக்கரணை துணை ஆணையாளர் கார்திகேயன் தலைமையிலான உதவி ஆணையாளர்கள், 14 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments