கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு

0 513

கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று, 5 மணி நேரமாக ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை தமிழக போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மங்களூரைச் சேர்ந்த பரசுராமா என்பவர் சபரிமலைக்கு சென்றுவிட்டு 3 சக்கரவாகனத்தில் சென்றுவிட்டு திண்டுக்கல் மாவட்டம் வழியாக கர்நாடகா திரும்பியபோது வழிமாறி பட்டிவீரன்பட்டி அருகே ஆற்று சகதியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை கரையேர முடியாமல் தவித்த நிலையில் கர்நாடக போலீசுக்கு பரசுராமா தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தமிழக காவல்துறை அவர்கள் அளித்த தகவலின்பேரில் , வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் ஒரு மணி நேரம் அலைந்து அவரை பத்திரமாக மீட்டு உணவளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments