3ம் வகுப்பு மாணவியை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேய நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சிறுமி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த சிறுமியை தலைமை ஆசிரியர் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அப்போது அழுததால் தன்னை விட்டுவிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் மீது புகார் அளிக்கக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தாமாக முன்வந்து திருத்தணி மகளிர் போலீசார், குழந்தை பாதுகாப்பு அலுவர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் சிறுமி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
Comments