தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

0 1014
தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

காஞ்சிபுரத்தில் ஏழு மாத ஆண் குழந்தையின் தொண்டையில் தைல டப்பா சிக்கி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அந்த டப்பாவை லாவகமாக எடுத்து குழந்தையைக் காப்பாற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்த அஜித் - டயானா தம்பதிக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. வீட்டில் விளையாடிய போது தைல டப்பாவை வாயில் வைத்த குழந்தை, அதனை வெளியே துப்ப தெரியாமல் சிரமப்பட்டு முழுங்க முயன்று உள்ளது. பெரிய சுற்றளவு உள்ள இந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சென்று பலமாக சிக்கிக் கொண்டது.

குழந்தையின் அழுகையைக் கண்ட பெற்றோர் குழந்தையை தூக்கி என்ன ஏது என கவனித்துக் கொண்டிருந்த போதே குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிக் கண்டு
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதை கண்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பலாம் என முதலில் திட்டமிட்டனர்.

ஆம்புலன்ஸ் வரும் நேரத்துக்குள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய டப்பாவை எடுக்கலாம் என்ற முடிவுக்கு மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பாலாஜி மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மணிமாலா ஆகியோர் முடிவு எடுத்து சில வினாடிகள் ஆலோசனை செய்தனர்.

பின்னர் குழந்தையை மென்மையாக தூக்கி பிடித்து "நுணுக்கமாக செயல்பட்டு தொண்டைக்கும் மூச்சு குழலுக்கும் இடையில் பலமாக சிக்கி இருந்த தைல டப்பாவை குரல்வளை காட்டி என்ற முறையில் போராடி தைல டப்பாவை மிக லாவகமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.

தைல டப்பாவை தொண்டையில் இருந்து எடுத்த பின்னர் குரல் வளைக்கும் தொண்டைக்கும் எந்தவிதமான சேதம் இல்லை, குழந்தையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments