எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

0 157

 சென்னை குன்றத்தூர் அருகே வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்து நெடியால் இரு குழந்தைகள் பலியான நிலையில் , இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மருத்துவரின் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்

சென்னை , குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரியில் வங்கி ஊழியர் கிரிதரன் வீட்டில் யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் எலி மருந்து வைக்கப்பட்ட நிலையில் அதன் நெடியை சுவாசித்த இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டுக்குள் 3 இடங்களில் வைக்க வேண்டிய விஷத்தன்மை வாய்ந்த மருந்தை 12 இடங்களில் வைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் ஊழியர்கள் தினகரன், சங்கர் தாஸ் ஆகிய இருவரை கைது செய்த நிலையில், உடிமையாளர் பிரேம்குமார் என்பவரை தேடி வருகின்றனர்

ஆன்லைனில் பிரேம்குமாரின் பேச்சை நம்பி தான் எலியை ஒழிக்க மருந்து வைத்ததாக கிரிதரன் குடும்பத்தினர் தெரிவித்தனிலையில், வீட்டுக்குள் செல்ல மாட்டோம் என்று கிரிதரன் குடும்பத்தினர் கூறியதால் தீவிரம் வாய்ந்த மருந்து வைத்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர்.

அதிக சக்தி வாய்ந்த எலி மருந்து வைக்கப்பட்ட படுக்கை அறையில் ஏசி போட்டு படுத்து உறங்கியது, மூச்சுத்தினறலுக்கு காரணமாகிவிட்டதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்

இது போன்ற நேரங்களில் மருந்து தெளிக்கப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் மிகுந்த கவனமாக இருப்பதுடன், குறைந்தபட்சமாக 12 மணி நேரமாவது அறைகளை பயன் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார் அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் சையது ஹாரீஸ்

கிரிதரனின் வீட்டில் எலியை கொல்ல வைக்கப்பட்டதாக கூறப்படும் அலுமினியம் பாஸ்பேட் மருந்தை வீட்டில் பயன்படுத்தவே கூடாது என்றும் அதற்கு தடை இருப்பதாகவும் தெரிவித்த தமிழ்நாடு பெஸ்ட் கண்ட்ரோல் மேலாண்மை கூட்டமைப்பு தலைவர் பாலமுரளி , வீட்டில் மருந்து அடிக்க வருபவர்களிடம் பப்ளிக் ஹெல்த் பயன்படுத்தக்கூட்டிய மருந்தா ? என்று விசாரித்து பயன்படுத்துவது அவசியம் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments