இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

0 1484
இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வீட்டுக்கடனுக்கு 3 மாதம் தவணை செலுத்தாத வீட்டு உரிமையாளரை அசிங்கப்படுத்த , அவரது வீட்டுசுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என்று பெயிண்டால் எழுதி வைத்ததாக பிரமல் நிதி நிறுவன ஊழியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

வீட்டுக்கடனுக்கு 3 மாத தவணை தொகை செலுத்தவில்லை என்பதற்காக வீட்டுசுவற்றில் அந்த வீடு கடனில் இருப்பதாக பெயிண்டால் எழுதிய தனியார் பைனான்ஸ் ஊழியர்களின் அராஜகம் தான் இந்த காட்சிகள்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் . சொந்தமாக பனியன் கம்பனி வைத்து நடத்தி வரும் இவர் கந்தம்பாளையம் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட கடந்த 2017-ம் ஆண்டு, திருப்பூர் DHFL (DIWAN HOUSING FINANCE LIMITED) தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார். 30 வருட கால அவகாசத்தில், மாதம் ரூ.16,457 தவணை என்ற அடிப்படையில் 20 லட்சத்து 80 ஆயிரம் வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகின்றார்.

சோமசுந்தரம் தவறாமல் தவணை செலுத்தி வந்த நிலையில், DHFL நிதி நிறுவனத்தை கடந்த 2022-ம் ஆண்டு PCHFL (PIRAMAL CAPITAL AND HOUSING FINANCE LIMITED) நிதி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதையடுத்து புதிய நிர்வாகம் சோமசுந்தரத்தின் வீட்டுக் கடனை மறுசீரமைத்து மாதத் தவணையை 19 ஆயிரத்து 750-ஆக நிர்ணயித்துள்ளது. அதன்படி, மாத தவணை செலுத்தி வந்துள்ளார் சோமசுந்தரம். மேலும், சொந்த நெருக்கடி காரணமாக கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் என இரு தவணைகள் மட்டும் கட்ட முடியாமல் போனதாக கூறப்படுகின்றது.

கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி தவணை செலுத்திய நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் நவம்பர் 8-ம் தேதி சோமசுந்தரத்தின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த பெண்களை அச்சுருத்தும் வகையில் மிரட்டிப் பேசியதோடு, வீட்டின் வெளிப்பக்க சுவரில் வீடு "PCHFL கடனில் உள்ளது" என பெயிண்டில் பெரிய எழுத்துகளாக எழுதி வைத்தனர்

சொத்து சுவாதீன அறிவிப்பு என்ற தலைப்பில் தவணை கட்ட தவறியதால் தனியார் நிதி நிறுவனம் சுவாதீனம் செய்வதாக எச்சரிக்கை விடுத்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரையும் வீட்டின் சுவற்றில் ஓட்டியுள்ளனர். மூன்று தவணைகளுக்காக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த சோமசுந்தரம் சந்தேகமடைந்து ஆன்லைனில் தனது வீட்டுக் கடன் குறித்து தேடிய போது அதிலிருந்த விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக சோக சுந்தரம் தெரிவித்தார்.

30 வருட தவணையாக இருந்த தனது வீட்டுக்கடன் தனக்கு தெரியப்படுத்தாமலேயே 82 ஆண்டுகளுக்கு கடன் கட்டும் காலத்தை உயர்த்தி இருப்பதாகவும், தான் வாங்கிய 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனானது, 82 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் கட்டும் வகையில் மாற்றப்பட்டு இருந்ததாகவும், பின்னர் பலமுறை முறையிட்ட பின்னர் இப்போது 40 ஆண்டுகளாக மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய சோம சுந்தரம் இது குறித்து புகார் அளித்திருப்பதாக கூறினார்

சம்பந்தப்பட்ட நிதிநிறுவன நோடல் மெயில்க்கு புகாரளித்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்த அவர் நிதி நிறுவன அராஜக போக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கிறார். சோமசுந்தரத்தின் புகார் தொடர்பாக நிதி நிறுவனம் சார்பில் பிளக்ஸ் வைத்த ஹரீஷ என்பவரிடம் கேட்ட போது, இது தொடர்பாக வங்கி நிர்வாகம்தான் விளக்கம் அளிக்கும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments