கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

0 884

சென்னை மவுன்ட் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளரான லிங்கேஸ்வரன் கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கும், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படும் கைதிகளை சிறைக்கும் லிங்கேஸ்வரன் தலைமையில் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரன் சீருடை அணியாமல் மது அருந்தி வருவதாகவும், கைதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் பேசுவதற்கு செல்போன்களை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments