தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!

0 654

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள குடுமணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜஸ்வின் என்ற 10 மாதக் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தனது குழந்தை நல்ல நிலையில் தான் இருந்ததாகவும் தடுப்பூசி போட்ட பிறகே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் கலைச்செல்வி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜஸ்வினுடன் வேறு சில குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததால், உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும் எனவும் நீலகிரி கோட்ட மருத்துவ அதிகாரி ரவிசங்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments