இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களுக்கான இடங்களில் 196 இடங்கள் நேரடியாக மக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும். மொத்தம் உள்ள 160 மாவட்டங்களில் மாவட்டத்தில் ஒரு இடம் எனவும், 36 மாகாணங்களுக்கு தலா 4 இடங்கள் எனவும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். தான் விரும்பிய சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் நோக்கில், அதிபர் அனுர குமார திசநாயகே இத்தேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நாளைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments