ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

0 1073

30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாந்தரையாக இருந்த 100 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஒருவர் ஒரு லட்சம் அரியவகை மரங்கள் கொண்ட காடாகவும், பல்வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் மாற்றிக் காட்டியதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு இது...

திரும்பிய பக்கமெல்லாம் பச்சைபசேலென காட்சியளிக்கும் இந்த காட்டினை தனி மனிதர் ஒருவர் சுமார் 30 ஆண்டுகால போராட்டத்தில் உருவாக்கி உள்ளார் என்பது தான் ஆச்சரியமான உண்மை.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த சரவணன், இயற்கை மீது கொண்ட காதலால் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உள்ள சர்வதேச நகரில் தன்னை 1989 ஆம் ஆண்டு இணைத்து கொண்டார்.

இயற்கையின் மீது சரவணனுக்கு இருந்த ஆர்வத்தால் கவர்ந்த ஆரோவில் நிர்வாகம், பூத்துறை கிராமத்தில் வெட்டாந்தரையாகவும், செம்மண் மேடாகவும், மரங்களற்றும் இருந்த தங்களது 100 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தனர்.

மரங்களே இல்லாத வெட்டாந்தரையில் குடில் அமைத்து குடியேறி, உலர் வெப்ப மண்டல காட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சரவணன், சுற்றிலும் வரப்புகள் அமைத்து மழைநீரை பூமிக்கடியில் செல்லும்படி செய்தார்.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, மண்ணின் வளம் சிறப்பாகவே, உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டார் சரவணன்.

ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்த இடத்தில் தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்துள்ளன. செடி, கொடிகள் வளர வளர அங்கு வந்த பறவைகள் போட்ட எச்சத்தால் மற்ற மரங்கள் தானாக வளர்ந்ததாகவும், தற்போது இப்பகுதிக்கு ஆரண்யா வனம் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறினார் சரவணன்.

ஆரண்யா வனத்தில் சிவப்பு சந்தனம், கருங்காலி, வேங்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும், மாங்குயில், பச்சப்புறா, கொண்டாலத்தி, அமட்டகத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும், மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, தேவாங்கு, உடும்பு, எறும்புதிண்ணி உள்ளிட்ட 40 வகையான விலங்குகள் மற்றும் பல்வேறு பாம்பு இனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

இந்த ஆரண்ய வனம் தற்போது இயற்கை ஆர்வலருக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவும், மரம், பறவை, விலங்குகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாத இடமாக மாறி உள்ளது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பினரும் தங்களது பகுதியில் 33 விழுக்காட்டை பசுமையாக மாற்ற முன்வர வேண்டும் என்பதே சரவணனின் வேண்டுகோளாக உள்ளது. ((Spl gfx out ))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments