சென்னை திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் வாயுக்கசிவு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு திறப்பு
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவால் மூடப்பட்ட விக்டரி மேல்நிலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கடந்த 4தேதி பள்ளியில் இருந்த 8 மாணவிகள் வாயுக் கசிவால் மயக்கமடைந்தாகக் கூறப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பள்ளி வளாகத்தில் ஆய்வு நடத்தி, வாயுக் கசிவு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் கருத்துக்கேட்பு நடத்திய பின், பெற்றோரின் விருப்பத்துடன் பள்ளி திறக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments