சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

0 804

கும்பகோணம் அடுத்த சூரியனார் கோயில் மடத்தின் ஆதினமாக 4 ஆண்டுகளுக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்டவர் மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள். துறவறம் பூண்டவர்கள் மட்டுமே மடங்களில் ஆதினமாய் இருக்க இயலும் என்ற நிலையில் மகாலிங்கம் சுவாமிகள் பெங்களூருவில் ஹேமலதா என்ற பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக பதிவு திருமண சான்று வெளியானது. மகாலிங்கம் சுவாமிகளும் தனது திருமணத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்

இந்த நிலையில் துறவிகளுக்கு உரிய நடத்தையை மீறிய மகாலிங்கம் சுவாமிகள் மடத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடத்தபோவதாக சில அமைப்பினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக மடத்தை முற்றுகையிட்டதால் ஆதீனத்தின் முக்கிய சொத்து ஆவணங்களுடன் மடத்தை பூட்டி விட்டு வெளியெறிய மகாலிங்கம் சுவாமிகள் பாதுகாப்பு கேட்டு உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரது வீட்டில் தஞ்சம் அடைந்தார்

அந்த வீட்டின் முன்பும் பகதர்கள் குவிந்ததால் வாசலில் சேர் போட்டு அமர்ந்த மகாலிங்கம் சுவாமிகள், தான் இனி சூரியனார்கோயில் மடத்தில் ஆதினமாக தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரியிடம் ஆதினம் மகாலிங்கம் சுவாமிகள் தன்னுடைய அனைத்து பொறுப்புகளையும் மடத்தின் சொத்து குறித்த ஆவணங்களையும் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் எழுதிக்கொடுத்தார். பின்னர் உடமைகளை எடுத்துக் கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டார். ஆதீன மடத்துக்கு பூட்டு போடப்பட்டது

மடமா ? மனைவியா ? என்று கேள்வி எழுந்த நிலையில் சன்னியாசம் வேண்டாம்.. சம்சாரம் தான் வேண்டும்..! என்று முடிவெடுத்த மகாலிங்கம் சுவாமிகள் மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு திரும்பி இருப்பதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments