அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்..

0 441

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றுவருகின்றது.

டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா  தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் .

பின்னர்,டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை கோயில் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும் எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments