மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு வெளியூருக்கு அழைத்து சென்ற இடத்தில், மாணவிகளை பீர் குடிக்க வைத்து உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லியும், செயலாளர் செய்யது அகமதுவும், இதனை வீட்டில் சொல்லக்கூடாது என்று மாணவிகளை மிரட்டி அனுப்பியதாக குற்றஞ்சாட்டி பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர்.
மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர், மற்றும் மறைக்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த திருச்செந்துர் டி.எஸ்.பி, போராட்டத்தை தூண்டியதாக இருவரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்
அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் உடற் கல்வி ஆசிரியர் பொன் சிங், மாணவிகளுக்கு துணையாக ஆண் ஆசிரியரை அனுப்பியதோடு, புகார் தெரிவித்த மாணவிகளை மிரட்டி குற்றத்தை மூடி மறைக்க முயன்றதாக பள்ளியின் முதல்வர் ஸ்வீட்லி, செயளார் செய்யது அகமது ஆகிய 3பேரையும் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை அவர்களது வழக்கறிஞர்கள் செவ்வாய் கிழமை காலை காவல் நிலையத்துக்குள் சென்று சந்தித்து சென்ற சிறிது நேரத்தில் பள்ளி செயலாளர் செய்யது அகமது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூற , அவரை தொடர்ந்து பள்ளி முதல்வர் ஸ்வீட்லி தனக்கும் நெஞ்சுவலிப்பதாக கூறினார்
இருவரையும் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஸ்வீட்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை படம் பிடிப்பதை கண்டு எரிச்சல் அடைந்த ஸ்வீட்லியின் கணவர் செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்தார்
மருத்துவமனைக்கு நடந்து சென்ற இருவரும் தங்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதாக கூறி ஆளுக்கொரு பெட்டில் படுத்துக் கொண்டதால் மருத்துவர்களை வரவழைத்து அவர்களை பரிசோதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, நெஞ்சில் கைவைத்து கதறிய இருவரும் இருவரும் சாதாரணமாக காணப்பட்டனர். அவர்களை இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments