மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம்..!

0 494

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மகப்பேறு மருத்துவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு கடந்த 6ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு சுவாசப்பிரச்சினை இருந்ததால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது.

இதையடுத்து பிரசவத்தின்போது அலட்சியமாக நடந்துகொண்டதே குழந்தை இறக்கக்காரணம் என்று கூறி மருத்துவர் ரம்யா நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி புறநோயாளிகள் பிரிவை மருத்துவர்கள் புறக்கணித்ததால் டோக்கன் வாங்கிவிட்டு காத்திருந்த நோயாளிகள் ஏமாற்றமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments