எங்குபார்த்தாலும் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கவேண்டுமா? - சீமான்

0 587

தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், பேரறிஞர் அண்ணாவை திமுக புறக்கணித்துள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோட்டில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பி கருணாநிதி என எதிர்கால தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்ய தி.மு.க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி களத்தில் இருந்த போது கட்சி தொடங்கிய தான், விஜய்யை பார்த்து பயந்துவிட்டதாக கூறுவது வேடிக்கை என சீமான் தெரிவித்தார்.

5 வயதிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் தான் டீசண்ட் பொலிடீசியன் கிடையாது என்று கூறிய சீமான், மொழி, இனம் என பிரிக்கக்கூடாது எனக்கூறும் விஜய் ஏன் கேரளா, ஆந்திராவில் கட்சி தொடங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments