UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

0 5069

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிப்பதற்காக ரயில்வேயின் யு.டி.எஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சில சமயங்களில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்பும், டிக்கெட் பதிவாவதில்லை என்று கூறப்படும் நிலையில், அந்தப் பயணிகள் அபராதம் செலுத்த நேரிடுவதாக புகார் எழுந்துள்ளது.

முன்பதிவற்ற ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள், வரிசையில் காத்திருந்து பயணச் சீட்டு பெறுவதை தவிர்க்க UTS எனும் மொபைல் செயலி ரயில்வேயால் அறிமுகம் செய்யப்பட்டு , பயன்பாட்டில் உள்ளது.

UTS செயலி மூலம் தங்களுடைய செல்போன்களிலேயே பயணச் சீட்டு பெற முடியும் என்பதால் சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் பலரும் UTS செயலியையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக UTS செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் பயணச் சீட்டு பதிவு செய்வோரிடம் கட்டணம் அக்கவுண்டில் இருந்து எடுக்கப்பட்டாலும் , மொபைல் செயலியின் Show ticket பகுதியில் பயணச் சீட்டு எடுக்கவில்லை என காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து நிர்வாக ரீதியாக புகார் அனுப்பியுள்ளதாகவும் , பாதிக்கப்படும் பயணிகளுக்கு 3 நாட்களுக்குள் கட்டணத் தொகையை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர்.

ரயில்களில் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வித் அவுட்டில் வருவோருக்கு அபராதம் விதிப்பதற்கும் , UTS செயலியின் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்படுவோருக்கு அபராதம் விதிப்பதற்கும் வேறுபாடு இருக்க வேண்டும் என ரயில் பயணிகள் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யுடிஎஸ் செயலியில் டிக்கெட் பதிவாகாதது தெரியவந்தால், அந்தப் பயணியிடம் அபராதம் வசூலிக்காமல், டிக்கெட் கட்டணத்தை மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments