கும்பகோணத்தில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா.!

0 463

உலகில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறையில் தேர்தலை அறிமுகப்படுத்தியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.இவ்விழாவில் எம்.பி. கல்யாண சுந்தரம், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவினை முன்னிட்டு கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ராஜராஜசோழன் தொடர்பான ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர் .

இதில் சிறப்பாக வரையப்பட்ட ஓவியங்களுக்கு அமைச்சர் கோவி. செழியன் பரிசுகள் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments