காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

0 527

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த நகப்பாளையம் கல்லூரி மாணவர்கள் 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாணவர் வினீத் உள்ளிட்ட 3 பேர் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

வினீத்தின் தாய் தேடிச் சென்றபோது, கரையோரத்தில் செல்போன்கள், செருப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் 3 பேரையும் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை தேடி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments