சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

0 1401

சென்னையில் மெத்தபெட்டமைன் போதை பொருளுடன் சீரியல் துணை நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டார். போதை வியாபாரியான நடிகைக்கு மால் வாசலில் வலை விரித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

சென்னையில் நடத்தப்படுகின்ற விருந்து நிகழ்ச்சிகளில் மெத்தபெட்டமைன் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்மையில் நைஜீரியாவை சேர்ந்த இளைஞரை கைது செய்த அண்ணாசாலை போலீசார் அவரிடம் இருந்து சென்னையில் மெத்தபெட்டமைன் வாங்கும் நபர்கள் யார் ? என்ற விவரத்தை சேகரித்தனர்.

நைஜீரியர் கொடுத்த தகவலின் பேரில் இளைஞர் ஒருவரை பிடித்த போலீசார் அவர் மூலம் மெத்தபெட்டமைன் எப்படி விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்கிறது என்று விசாரித்த போது இளம் பெண் ஒருவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர் சொன்ன வாட்ஸ் அப் எண்ணில் பார்ட்டிக்கு “மெத்” வேண்டும் என்று தகவல் சொன்னதும் , ராயப்பேட்டையில் உள்ள பிரல மால் ஒன்றின் 7 வது வாசலுக்கு எதிரே வரச்சொன்னார் அந்த பெண்.

இதையடுத்து அவரை பெண் போலீசார் உதவியுடன் மடக்கிப்பிடித்து சோதனை செய்த போது அவரது கைப்பையில் 5 கிராம் எடை கொண்ட மெத்த மெட்டமைன் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அண்ணாசாலை போலீசாரின் விசாரணையில் அவர் சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் வசிக்கும் எஸ்தர் என்கிற மீனா என்பதும் அவர் சுந்தரி என்ற தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடித்திருப்பதும் தெரியவந்தது. டெடி படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பெரிய அளவில் தொடர் பட வாய்ப்புகள் இல்லாததால் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியிகளில் வெல்கம் கேர்ளாக பங்கேற்பதை வழக்கமாக்கிய எஸ்தர், அங்கு கிடைத்த நட்பு மூலமாக மெத் போதைப்பொருள் விற்பனையில் இறங்கியதாக கூறப்படுகின்றது. 1000 ரூபாய்க்கு வாங்கி அவற்றை 3000 ரூபாய்க்கு கைமாற்றி விடும் வகையில் சிறிய சிறிய பாக்கெட்டுகளாக போட்டு கைப்பையில் மறைத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவபரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஸ்தரை சிறையில் அடைத்த போலீசார்,
எஸ்தர் மூலமாக விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருள் பெற்றவர்கள் யார் ? திரையுலகம் தொடர்புடைய நபர்களுக்கு எஸ்தர் மெத்தபெட்டமைன் போதை பொருளை சப்ளை செய்தாரா ? என்ற கோணத்திலும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments