நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மறைந்த டெல்லி கணேஷ்... 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...
மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல்ஹாசனுடன் டெல்லி கணேஷ் நடித்த காட்சிதான் இது.
அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, நாயகன், தெனாலி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கமலுடன் நடித்தவர் டெல்லி கணேஷ்...
இந்தியன் விமானப் படையில் பணியாற்றிவந்த டெல்லி கணேஷ்,
1976ம் ஆண்டு வெளியான பட்டணப் பிரவேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
எங்கம்மா மகாராணி படத்தில் நாயகனாக நடித்த டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடங்களில் அதிக அளவில் நடித்து பிரபலமானவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருப்பதுடன், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார்
நாயகன், சிந்து பைரவி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு அமைந்திருந்ததை மறக்க முடியாது.
நகைச்சுவை நடிகராக புகழ்பெற்ற போதிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்...
Comments