நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் குடிநீரை திருடிய EGS தனியார் கல்லூரி நிர்வாகம் - ரூ.2 கோடி அபராதம்
நாகப்பட்டினம் அருகே, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில், ஓட்டைப் போட்டு, குடிநீரை திருடிய EGS பிள்ளை என்ற தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் சோதனை நடத்தினர்.
அப்போது, EGS பிள்ளை கல்லூரி நிர்வாகம் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் என, 3 மாதங்களாக குடிநீர் திருட்டில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டு, அவர்களின் முறையற்ற இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments